நாட்டில் தற்போது 4 விகிதங்களாக உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பை 2 விகிதங்களாக குறைக்க மாநில அமைச்சர்களின் ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. நாட்டில் தற்போது 5, 12, 18, 28 என 4 பிரிவுகளில் உள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி முறையில் சீர்திருத்தங்கள் தேவை எனவும் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, ஜிஎஸ்டி முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து, 12 மற்றும் 28 சதவீத வரி அடுக்கை நீக்க மத்திய அரசு பரிந்துரை செய்தது.
இதனிடையே, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து முன்மொழியப்படும் என்றும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தால் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.