சென்னை ஆர்.கே.நகரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட நிகழ்ச்சியில் அடுக்கடுக்காக கேள்வி கேட்டவரை, திமுக எம்எல்ஏ திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட இருசப்ப மேஸ்திரி தெருவில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட நிகழ்ச்சியை அத்தொகுதி திமுக எம்எல்ஏ எபிநேசர் பார்வையிட்டார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், தங்களுக்கு இலவச திட்டங்கள் வேண்டாமெனவும் கூறினார். மேலும் தேர்தல் நேரத்தில் மட்டுமே வாக்கு கேட்க வருவீர்களா எனவும் அந்த நபர் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த திமுக எம்எல்ஏ, அந்த நபரை ஆவேசமாக திட்டினார்.
எம்எல்ஏவின் இந்த பேச்சை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கேள்வி கேட்டவரை திமுக எம்எல்ஏ திட்டியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.