சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையின் 386ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு சென்னை நம்பிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல பெண்களுக்கு பறக்க சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை சென்னை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்தது சீரிளம் சென்னை என கூறிய முதலமைச்சர், சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என தெரிவித்துள்ளார்.