தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஒப்புக்கொண்டுள்ளார்.
சேலம் மாநகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 26ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மாநில செயலாளர் முத்தரசன், 2019 மக்களவை தேர்தல் செலவுக்காக திமுக பணம் கொடுத்தது உண்மைதான் என தெரிவித்தார்.
திமுகவின் வங்கிக் கணக்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டதாகவும், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும் திமுகவிடம் பணம் பெற்றதாகவும் கூறினார். பணம் கொடுத்ததையும், பணம் பெற்றதையும் இருகட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக முத்தரசன் தெரிவித்தார்.