கூவத்தூரில் நாளை நடைபெறவுள்ள அனிருத்-ன் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் ‘ஹுக்கும்’ எனும் பெயரில் இசையமைப்பாளர் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி நடத்தப்படும் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி எம்.எல்.ஏ. பனையூர் பாபு தாக்கல் செய்த மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இசை நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி பெறப்பட்டதாக அனிருத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு, நிகழ்ச்சியால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டார்.