தமிழக வெற்றி கழக மாநாடு நடந்த இடத்தை தொண்டர்கள் அலங்கோலப்படுத்தியது, அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எவ்வளவு அலங்கோலமாக இருக்கும் என்பதை காண்பிப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முருக பக்தர் மாநாடு ஒழுக்கமான முறையில் நடைபெற்றதுதவெக மாநாடு ஒழுங்கீனமாக நடந்ததாக தெரிவித்தார்.
முருக பக்தர் மாநாடு நிறைவடைந்தவுடன் அனைத்து நாற்காலிகளும் அடுக்கப்பட்டு ஒரு குப்பை கூட இல்லாமல் இருந்ததை ஹெச்.ராஜா சுட்டிக்காட்டினார்.
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சி இல்லாத பேச்சாக உள்ளது என்றும், தவெக கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு நொறுங்கிப் போகும் என்றும் அவர் கூறினார்.