டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குதலில் இந்தியா – சீனா ராணுவம் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது இருதரப்புக்கிடையே நல்லுறவு நிலவி வருவதால் டிக்-டாக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியானது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, டிக்-டாக் செயலி மீதான தடையை நீக்க இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், இதுபோன்ற தகவல் மக்களை தவறாக வழிநடத்தும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.