ஆவணி திருவிழாவை ஒட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், சுவாமி சுப்பிரமணியருக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு ஆராதனை நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர்.