தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் - குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!
Sep 14, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 23, 2025, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் முழுவதும், தனியார் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கி,  பணிகளைத் தொடங்க வேண்டும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் கட்டிடத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, போதிய வசதிகள் இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர், இன்று அதிகாலையில் இடிந்து விழுந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, அதிகாலை என்பதால், குழந்தைகள் யாரும் இல்லாமல், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும், 7,441 அங்கன்வாடி மையங்கள், தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட, தமிழக மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் கட்டிடங்களில் இது போல விபத்துகள் நேரிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? ஊர் ஊராகச் சென்று, தனது தந்தையின் சிலையை வைக்கத் தெரிந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  நமது குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்ட ஏன் மனம் வரவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வீண் விளம்பரங்களுக்காக செலவிடவா மக்கள் வரிப்பணம்? தமிழகம் முழுவதும், பள்ளிகளுக்கு முறையான கட்டிடங்கள் இல்லை. திமுக ஆட்சியில் கட்டப்படும் கட்டிடங்களும், முதலமைச்சர் திறந்து வைத்த அடுத்த நாளே இடிந்து விழுகின்றன என அவர் கூறியுள்ளார்.

அடிப்படைக் கல்வி வழங்கும் அங்கன்வாடி மையங்கள், வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவித்து, தனியார் பள்ளிகள் நடத்தும் திமுகவினர் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே, தமிழக சமூக நலத்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உடனடியாக, தமிழகம் முழுவதும், தனியார் கட்டிடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கி, அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுகவினர் சம்பாதிப்பதற்காக, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாதுகாப்பைப் புறக்கணிக்கக் கூடாது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: annamalaiAnnamalai condemnedAnganwadi centers operating in private buildingsAnganwadi building collapsed
Share
Tweet
SendShare
Previous Post

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies