திருப்பூரில் பிரபல முன்னணி நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பனியன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அன்னையம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் குடோனில், பிரபல முன்னணி நிறுவனிங்களின் பெயர்களில் போலியாக பனியன் தயாரித்து விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், முன்னணி பிராண்டுகளின் பெயரில் பனியன் தயாரித்ததை கண்டறிந்தனர்.
இதனையடுத்து போலியாக தயாரிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் பனியன் பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்ப்டட பனியன்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என தெரிவித்துள்ள போலீசார், குடோன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.