ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க 7 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு 24 ஆயிரம் கனஅடிநீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மழை குறைந்ததால் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக 7 நாட்களுக்கு பிறகு ஆற்றில் பரிசல் இயக்கவும், நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.