டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின விழாவில் சுபான்ஷு சுக்லா கலந்துகொண்டார்.
2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறக்கப்பட்டது. இதை கொண்டாடும் விதமாக தேசிய விண்வெளி தினம் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில், தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில், விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கலந்துகொண்டார். விழாவில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.