தர்மஸ்தலாவில் பல்வேறு உடல்கள் புதைக்கப்பட்டதாக புகாரளித்த நபரை சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பல உடல்கள் புதைக்கப்பட்டதாக சமீபத்தில் வெளியான செய்தி நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக புகார்தாரர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் பல உடல்கள் மீட்கப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உண்டாக்கியது.
இந்த வழக்கில் புகார்தாரரும், சாட்சியுமான முன்னாள் துப்புரவு தொழிலாளி 1995 முதல் 2014 வரை தர்மஸ்தலாவில் பணிபுரிந்ததாகவும், பெண்கள் மற்றும் சிறார்களின் உடல்களை அடக்கம் செய்ய சிலர் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நீதிபதி முன்பும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில், புகார்தாரர் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆவணங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் அவரை கைது செய்து, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
புகார்தாரர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்ட இடங்களில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.