நெல்லையில் மிக பிரம்மாண்டமாக பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நடைபெற்ற நிலையில், இதில் பங்கேற்ற நிர்வாகிகள், நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த வீடியோ அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தச்சநல்லூர் பகுதியில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு நேற்று நடந்து முடிந்தது. பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றியது அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இருந்தனர். கூட்டம் நிறைவடைந்தபின் பாஜக நிர்வாகிகள் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை வரிசையாக அடுக்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.
பாஜக நிர்வாகிகள் நாற்காலிகளை அடுக்கி வைத்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் தங்களது பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.