காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.