இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகாவை மத்திய இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் வரவேற்றார்.
4 நாள் அரசுமுறை பயணமாக பிஜி நாட்டின் பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபுகா இந்தியா வருகை தந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் பிஜி பிரதமரை, மத்திய இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் வரவேற்றார். பிஜி பிரதமர், டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் நாளை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின் பிரதமர் மோடியை சந்திப்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் உடனான சந்திப்பின்போது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. பிரதமரை தொடர்ந்து குடியரசுத் தலைவரையும் பிஜி பிரதமர் சந்திப்பார் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.