தேனி மாவட்டம் கூடலுாரில் சாமந்தி பூவின் விளைச்சல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கழுதை மேடு, கல்லுடைச்சான் பாறை, பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாமந்தி பூ தோட்டத்தை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
அறுவடைக்கு தயாரிகி உள்ள இந்த பூக்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கிலோ 250 ரூபாய் வரை விற்பனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் அதிக வெப்பம் காரணமாக விளைச்சல் 40 சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரிவித்த விவசாயிகள், இதனால் செடிகளிலேயே பூக்களை விட்டுவிடுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.