சென்னையில் காதலன் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததால், 7வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராயபுரம் பகுதியை சேர்ந்த ஹர்ஷிதா என்பவரும், வேப்பேரி பகுதியை சேர்ந்த தர்ஷன் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ‘
மாற்றுத்திறனாளியான அந்த பெண்ணுக்கும், தர்ஷனுக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது ஹர்ஷிதாவை திருமணம் செய்ய தர்ஷன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், அவரது உறவினர்களுடன் சென்று தர்ஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹர்ஷிதாவின் நடவடிக்கை சரியில்லை என தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பெண், வீட்டின் 7வது மாடிக்கு சென்று கீழே குதித்துள்ளார்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காதலன் தர்ஷனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.