சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை, போலீசார் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் மீது அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, விசாரணைக்கு அழைத்து செல்ல வந்த போலீசார், பால்ராஜை கீழே தள்ளி அவரது இடது காலை உடைத்துள்ளனர். வலியால் துடித்த இளைஞரை அப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக வெளியே கூறக்கூடாது என்று போலீசார் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட இளைஞர் கூறியுள்ளார்.
போலீசார் தாக்கியதில் இடதுகால் செயலிழந்து விட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார்.