இளங்கலை பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்த யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.
யுஜிசி எனப்படும் பல்கலை கழக மானிய குழு, வேத கணிதம், சமஸ்கிருதம், யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய படிப்புகளை அறிமுகப்படுத்துமாறு அனைத்து பல்கலை கழகங்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் இளங்கலை பட்டப்படிப்புக்கான வரைவு கணித பாடத் திட்டத்தை யுஜிசி முன்மொழிந்துள்ளது. இதில் சூத்திர அடிப்படையிலான எண் கணிதம், இயற்கணிதத்தை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.