அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் 800 டாலர் வரையிலான அஞ்சல் பொருட்களுக்கு அமெரிக்காவில் இதுவரை சுங்க வரி எதுவும் விதிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 100 டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள அனைத்து பொருட்களுக்கும் சுங்க வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு வரும் 29ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால், அமெரிக்கா செல்லும் விமான நிறுவனங்கள் அஞ்சல் பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, இன்று முதல் இந்திய அஞ்சல் துறை மூலம் அமெரிக்காவுக்கு அனுப்ப்படும் அஞ்சல் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தபால் கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.