திருச்சி மாவட்டம் துரையூரில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்தின்போது குறுக்கே சென்ற ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி அதிமுகவினர் சரமாரி கேள்வி எழுப்பினர்.
தமிழகம் முழுவதும் இபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
அவரது கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கூட்டம் நடைபெறும் இடம் வழியாக அடிக்கடி ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதாகவும், இதனால் பரப்புரை பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
நோயாளியே இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி திமுக இடையூறு செய்து வருவதாக, எடப்பாடி பழனிசாமியும் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் துரையூரில் இபிஎஸ் பிரச்சாரம் செய்யவிருந்த நிலையில், மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் அவ்வழியாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.