முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை என மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மழைக்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, ஏற்கனவே ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டினார்.
அப்போது முதல் முறையாக கடன் வாங்குபவர்களின் விண்ணப்பங்கள், கடன் வரலாறு இல்லை என்பதற்காக நிராகரிக்க கூடாது என கூறினார்.
கடன் வழங்க குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும் என எந்தவொரு விதிமுறையும் ரிசர்வ் வங்கி வகுக்கவில்லை எனவும் வங்கிகள் தங்கள் வணிக ரீதியான முடிவுகளுக்கு ஏற்ப விண்ணப்பதாரரின் தகுதியை பல அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாம் எனவும் விளக்கம் அளித்தார்.
மேலும், கடன் தகவல் நிறுவனங்கள் ஒரு தனிநபரின் கடன் அறிக்கையை வழங்க 100 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்தார்.