உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்த இளைஞரில் செயலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து அட்டூழியம் செய்துள்ளார். மனதில் தன்னை ஸ்பைடர் மேனாகவே நினைத்துக் கொண்ட அந்த இளைஞர் அந்தரத்தில் தொங்குவதும், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக பரபரப்பான சாலையில் பல்டி அடிப்பதும் போன்ற சாகசங்களில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறிய மீரட் ஸ்பைடர் மேன் அங்குள்ள மணிக்குண்டில் ஏறி சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இதை ஆச்சரியத்துடன் சிலர் பார்க்க, மற்றும் பலர் அந்த இளைஞர் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குரளி வித்தை காட்டிய அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.