உத்தரப்பிரதேசம் அருகே டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 8 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் பகுதியில் இருந்து ராஜஸ்தானின் கோகாஜி பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் டிராக்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. புலந்த்ஷஹர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 8 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் படுகாயமடைந்த 43 பக்தர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் காணப்பட்ட சேதமடைந்த டிராக்டர் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.