திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக வெள்ளிவிழா மற்றும் சமூக–சமத்துவ மாநில மாநாட்டு நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அழைப்பின் பேரில் கலந்துகொண்டு உரையாற்றியதாக தெரிவத்துள்ளார்.
தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காக உழைக்கவும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று வலியுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில், அஇஅதிமுக துணை பொதுச்செயலாளர் திரு. நத்தம் விஸ்வநாதன் அஇஅதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தென்னிந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திரு.K.C. திருமாறன் ஜி, பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் திரு முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.