குடியரசு தலைவர் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், பிரதமர் மேற்க்கில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டதே. குடியரசு துணை தலைவர் வேட்பாளர் தெற்கில் இருந்து தேர்வு செய்யப்பட காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், தமிழக சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து குடியரசு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதையும், மேற்கு பகுதியை இருந்து சேர்ந்த மோடி, நாட்டின் பிரதமராக உள்ளார் என்பதையும் சுட்டிக்காட்டிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெற்கில் இருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற இயல்பான எண்ணத்தின் அடிப்படையிலேயே சி.பி ராதாகிருஷ்ணனின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக மாநில தலைவராகவும், ஆளுநராகவும் பணியாற்றி அனுபவம் கொண்டவர் எனக்கூறிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தல் கண்ணோட்டத்தில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வை பார்க்கக் கூடாது என தெரிவித்தார்.
பிரதமர் மோடியும், தானும் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்கள் தான் என தெரிவித்த அமித்ஷா, ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து செயல்படுவதில் என்ன தவறு உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் அத்வானி, உள்ளிட்டோரும் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்களே எனவும் அமித்ஷா தெரிவித்தார்.