ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகின.
திறந்தவெளியில் வைப்பதால் ஒவ்வொரு முறையும் இதே பிரச்னையை எதிர்கொள்வதாக வியாபாரிகள் வேதனையடைந்தனர்.
எனவே, விற்பனைக் கூடத்தில் மேற்கூரை அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.