சச்சினை தொடர்ந்து சுனில் கவாஸ்கருக்கும் வான்கடே மைதானத்தில் ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது.
அதன்படி வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சரத்பவார் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் அருங்காட்சியக நுழைவாயிலில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கரின் ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987-ம் ஆண்டு வரை விளையாடிப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.