பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்தியாவில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் பண்டிகை உள்ளது. சிம்ம மாதம் எனப்படும் ஆவணி மாதத்தில் மலையாள மொழி பேசும் மக்களால் பாரம்பரிய முறையில் கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் கருதப்படுகிறது.
ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு புராணங்களில் பல கதைகள், காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது கேரள பாரம்பரியத்தை போற்றும் ஒற்றுமை அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
அந்த வகையில்பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைக் கட்டியது. தொடர்ந்து மகாபலி சக்ரவர்த்தி வேடமணிந்து வந்த நபர் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.