நொய்டாவில் வரதட்சணை கேட்டு, மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியைச் சேர்ந்த நிக்கி ரூபாஸுக்கு கடந்த 2016ம் ஆண்டுத் திருமணம் நடந்துள்ளது. அப்போதிருந்தே கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் நிக்கியை தொடர்ந்து வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நிக்கியின் கணவர் குடும்பத்தினர் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீயிட்டு கொளுத்தியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நிக்கியை துன்புறுத்தும் காட்சி மற்றும் தீயில் அவர் எரியும் காட்சி வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது கணவர் விபின் பாட்டியைக் கைது செய்யப் போலீசார் சென்றபோது அவர்களைத் தாக்கி விட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் அவரைப் போலீசார் சுட்டு பிடித்தனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போலீசார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து விபினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட நிக்கியின் மாமியார் உட்பட குடும்பத்தினர் 4 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.