கும்பகோணத்தில் உள்ள பகவத் விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாடு முழுவதும் வரும் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் விநாயகர் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், 7ஆம் நாள் விழாவில் விநாயகர் குபேர அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
இரு தொடர்பாகச் செய்தியாளர்களில் பேசிய கோயில் அர்ச்சகர், விநாயகர் சதுர்த்தியின் 7ஆம் நாள் விழாவில் விநாயகர் குபேர அலங்காரத்தில் எழுந்தருளியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், விநாயகருக்கு யானை தந்தம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அர்ச்சகர், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நடைபெறும் சந்தன காப்பு மற்றும் வீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.