தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டின் சுப நிகழ்விற்கு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் லோத்குண்டா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சுப நிகழ்விற்காகப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து 4 பேர் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
பந்தல் அமைக்கப் பயன்படுத்தப்படும் இரும்பு கம்பி, மின் வயரில் உரசியுள்ளது. அப்போது மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் சரிந்து விழுந்தனர்.
இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.