தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்கும் வகையில் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார்.
அச்சு, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கும் வகையிலான பாடத்திட்டம் இந்நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இதழியல் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதோடு, இதழியல் கல்வி நிறுவனத்தில் இதழியலுடன் இணைந்த டிஜிட்டல் மீடியா பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.