மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 10 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெறும்.
இதற்காக மும்பையில் பல்வேறு இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள், நடத்தப்படும். மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு, மஹாராஷ்டிரா அரசு மாநில விழா என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாத மும்பை மாநகரில் மிகவும் பிரபலமான லால் பாக்சா ராஜா விநாயகர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.