அமெரிக்காவில் வெளிநாட்டுக் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஹர்ஜிந்தர்ச் சிங்கின் கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மார்கோ ரூபியோ, வெளிநாட்டு ஓட்டுநர்களால் அமெரிக்கர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சாலைகளில் பாதுகாப்பின்மை அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
ஆகையால் வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார். இந்த நிறுத்தம் கனரக வாகன ஓட்டுநர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் பி 1 விசாக்களுக்கானது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.