விடாமுயற்சிதான் வெற்றிக்கான ஒரே வழி என இந்திய விண்வெளி வீரர்ச் சுபான்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.
தனது சொந்த ஊரான லக்னோவில் தான் படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராகச் சென்ற சுபான்ஷூ சுக்லா மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இங்குள்ள மாணவர்களைப் போல் தான் திறமையானவன் அல்ல என்றும், இந்த மாணவர்களின் பாதி திறமைக் கூட தன்னிடம் இருந்ததில்லை என்றும் கூறினார்.
தன்னாலேயே இவ்வளவு தூரம் வரமுடிந்தது என்றால், மாணவர்கள் வளர்ந்து என்னவாக இருப்பார்கள் என்பதை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது என்றும் சுபான்ஷூ சுக்லா கூறினார்.