முகத்தில் அதிக முடி கொண்டவராக, இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர்க் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.
18 வயதான லலித் படிதார் வேர்வுல்ஃப் சிண்ட்ரோம் எனும் அரியவகை நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் முகம் முழுவதும் அதிகளவு முடி வளர்ந்துள்ளது.
இதனால் முகத்தில் கிட்டத்தட்ட 95 சதவீத முடியுடன், அதாவது ஆணின் முகத்தில் அதிக முடி கொண்டவர் என்ற கின்னஸ் உலகச் சாதனையை லலித் படிதார்ப் படைத்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், லலித்தின் முகத்தில் ஒரு சதுரச் சென்டிமீட்டருக்கு 201 முடிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லலித்துக்கு ‘வேர்வுல்ஃப் சிண்ட்ரோம்’ எனப்படும் மிகவும் அரிதான ஒரு வகை நோய் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய, லலித் தன்னைக் கண்டு மக்கள் முதலில் பயந்ததாகவும், பின்னர்த் தன்னுடம் இயல்பாகப் பேச ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கின்னஸ் அங்கீகாரம் கிடைத்ததில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்தத் தோற்றம் தனக்குப் பிடித்திருப்பதாகவும் லலித் படிதார்த் தெரிவித்துள்ளார்.