திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதியதில் வடமாநில தொழிலாளியின் 6 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் கரைப்புத்தூர்ப் பகுதியில் டிப்பர் லாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிர்புறத்தில் இருந்து ஓடி வந்த சிறுமி டிப்பர் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கினார்.
இதில், உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து போலீசார்ச் சடலத்தை கைப்பற்றிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.