இந்தியாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆவதற்கு 21 வயது போதுமானதாக இருக்கும் நிலையில், அரசியலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21ஆக குறைக்கலாம் எனத் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர், 21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம், ஐ.பி.எஸ். ஆகலாம், மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாகப் பணியாற்றலாம் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
21 வயதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகும்போது, 21 வயதில் ஏன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது? எனவும் கேள்வி எழுப்பினார்.