மத்தியப்பிரதேசத்தில் வெள்ள நிவாரணத்துக்காகத் தனது பென்சன் பணத்தைக் கொடுத்துதவிய மூதாட்டியில் செயல் கவனமீர்த்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், குணாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா கலந்து கொண்டார்.
பின்னர் அவர் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த ஸ்ரீ பாய் எனும் 90 வயது மூதாட்டி, தனது ஓய்வூதியத்தில் இருந்து 2,223 ரூபாயை வெள்ள நிவாரணத்துக்காக வழங்கினார்.
இதனால் நெகிழ்ச்சியடைந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மேடையிலேயே மூதாட்டியின் செயலைப் பாராட்டி ஆசி பெற்றார்.