ஜெர்மனியுடன் கூட்டு சேர்ந்து உள்நாட்டிலேயே 6 நவீன நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குகியுள்ளது.
இந்திய கடற்படை அடுத்த 10 ஆண்டுகளில், தன்னிறைவு பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன்படி இந்தியாவின் மசகான் டாக் யார்டு நிறுவனமும், ஜெர்மனியின் தைசேன்குரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனமும் இணைந்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 6 நவீன நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.