விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் மல்லிப்பூ கிலோ ஆயிரம் ரூபாய்-க்கு விற்பனைச் செய்யப்படுகிறது.
சேலம் வஉசி பூ மார்க்கெட்டிற்கு வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இந்தநிலையில் நாளை மறுநாள் விநாயகர்ச் சதுர்த்தி பண்டிகை என்பதால் வஉசி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலைக் கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
600 ரூபாய்-க்கு விற்பனைச் செய்யப்பட்ட மல்லிப்பூ இன்று கிலோவுக்கு ஆயிரம் ரூபாயாகவும், அதேபோல் 300 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்ட முல்லை, தற்போது 700 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுகிறது.
பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனமழையால் பூக்களின் வரத்து குறைவாக உள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.