தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், மாணவர்களின் நல்வாழ்வையே அடிப்படையாக கொண்டு அயராது உழைப்பவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக
அரசு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை திருமதி.ரேவதி அவர்கள் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியை திருமதி.விஜயலட்சுமி அவர்கள் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
தங்களின் கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பு மிக்க பணியாலும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ள இருவருக்கும் தமிழக பாஜக சார்பில்சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள எக்ஸ் பதிவில்,
திறமையான மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பணி முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ள அவர், வலிமையான பாரத தேசத்தை கட்டமைக்கும் மாணவர்களை உருவாக்கும் உங்களின் அரும்பணி மென்மேலும் பல உயரங்களைத் தொட இறைவன் துணை நிற்க வேண்டுவதாக பதிவிட்டுள்ளார்.