சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17 வயது சீன மாணவி பரதநாட்டியம் ஆடி அசத்தினார்.
பரதநாட்டியம் தமிழ்நாட்டில் உருவான இந்திய செம்மொழி நடன வடிவம் ஆகும். தென்னிந்திய மதக் கருத்துக்களையும், ஆன்மீக எண்ணங்களையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமே பரத நாட்டியம்.
இவ்வாறு பல சிறப்புகளை உள்ளடக்கிய பரதநாட்டியம் புராண கதைகளையும், இந்து சமயக் கருத்துக்களையும் பெரும்பாலும் வெளிப்படுத்துகிறது. இதனால் பரதநாட்டியம் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
பல சிறப்புகளை உள்ளடக்கிய பரத நாட்டியத்தைப் பலரும் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். அந்த வகையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீனாவைச் சேர்ந்த 17 வயது மாணவி தனது பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். எல்லைக் கடந்த சிறுமியின் நடனத்தைப் பார்வையாளர்கள் பலரும் கண்டு ரசித்தனர்.