கோவை அருகே லாரியில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் வெடிமருந்து பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுக்கரை அருகே தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டர். அதில் சுமார் 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநர் சுபேரை கைது செய்து விசாரணை செய்தனர்.
கேரளாவில் சட்டவிராதமாக செயல்படும் சுரங்க பணிகளுக்காக வெடிமருந்துகள் கடத்தப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.