சென்னை குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சேக்கிழார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து மாதா பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கட்டடம் கட்டியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார், சவுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலத்தில் கல்லூரி செயல்படுவதால், மாற்று இடம் வழங்குவதாக கூறினார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தொடர்ந்து நடத்தவிடாமல் இருந்த கல்லூரி நிர்வாகத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக ஆணையிட்டனர்.
மேலும் வாடகை பாக்கி தொடர்பான கல்லூரியின் சீராய்வு மனு மீது அறநிலைய துறை ஆணையர் சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.