பறவைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி ஹாங்காங்கில் பறவை அழைப்பு போட்டி நடைபெற்றது.
உலகளவில், இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பு 2019 இல், 460 அழிந்து வரும் பறவை இனங்களைப் பட்டியலிட்டது.
மேலும் இந்த எண்ணிக்கைத் தற்போது அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிரேட் சைபீரியன் கொக்கு, இந்திய பஸ்டர்ட், ககாபோ கிளி, வெள்ளை-வயிற்று ஹெரான் மற்றும் வெள்ளை-சிறகுகள் கொண்ட வாத்து உள்ளிட்டவை அழிந்து வரும் பறவை இனங்களாகக் கருதப்படுகின்றன.
பறவைகளைப் பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் பறவைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி ஹாங்காங்கில் பறவை அழைப்பு போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர்ப் பங்கேற்று பறவைகளின் ஒலியை எழுப்பினர்.
தொடர்ந்து தத்ரூபமாக ஒலி எழுப்பியவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.