ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதேபோல் உதம்பூர் மாவட்டத்தில் பெய்த மழையால் முக்கிய சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சீரமைக்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து உதம்பூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவைச் சீரமைக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரமாண்ட தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் அங்கிருந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக அங்கு மக்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.