திருவண்ணாமலை மாவட்டம் மட்டப்பாறை முதல் பாலானந்தல் சாலை வரை 38 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலை, ஒரு மாதத்திற்குள் சேதமடைந்த அவலம் அரங்கேறியுள்ளது.
ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த சாலை, மீண்டும் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை, பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் மீண்டும் சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.